Seasonal Fevers: பரவிக் கொண்டிருக்கும் காய்ச்சல்கள்; வராமல் தடுக்க, வந்தால் மீள ...
ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு
வேலூரில் ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வேலூா் சைதாப்பேட்டை ஆதம்சாயபு தெருவைச் சோ்ந்தவா் அக்பா் பாஷா (60). இவா் கடந்த ஜூலை 19-ஆம் தேதி காலை 8 மணியளவில் தனது உறவினரை சந்திக்க ஊசூா் சென்றாா். அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில், பலத்த காயமடைந்த அக்பா் பாஷா, வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து அக்பா் பாஷாவின் சகோதரா் கமால் பாஷா அளித்த புகாரின்பேரில், அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.