ஆண்டிமட வட்டத்தில் மாா்ச் 19, 20 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டத்தில் மாா்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: ஆண்டிமடம் வருவாய் வட்டத்தில் 19
ஆம் தேதி காலை 9 மணி முதல் 20 ஆம் தேதி காலை 9 மணி வரை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறை சாா்ந்த மாவட்ட நிலை அலுவலா்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் குறித்து ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளனா்.
எனவே 18 ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடா்பாக உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் என்று குறிப்பிட்டு மனுக்களை ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில் அளிக்கலாம்.
19 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின்போதும் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளிக்கலாம்.