செய்திகள் :

``ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்'' - பாலிவுட் குறித்து தீபிகா படுகோனே

post image

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே குழந்தை பிறந்த பிறகு படப்பிடிப்புக்கு வர சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. 8 மணி நேரம் தான் பணியாற்றுவேன் என்று கூறியதாக தெரிகிறது.

இந்த நிபந்தனையால் சில முக்கியமான படங்களில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

இந்த சர்ச்சை குறித்து நடிகை தீபிகா படுகோனே முதல் முறையாக பேசியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

''ஒரு பெண்ணாக இருப்பதால் நான் 8 மணி நேர வேலையை வலியுறுத்துவதாகவே இருக்கட்டும்.

ஆனால் இந்திய திரையுலகில் பல சூப்பர் ஸ்டார்கள், ஆண் சூப்பர் ஸ்டார்கள் பல ஆண்டுகளாக 8 மணி நேரம் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது குறித்து தலைப்புச் செய்திகளாக வெளியில் வருவதில்லை.

நான் இப்போது அவர்களின் பெயர்களைச் சொல்லி இதை முழு விஷயமாக மாற்ற விரும்பவில்லை, ஆனால் பல ஆண்டுகளாக ஆண் நடிகர்கள் 8 மணி நேரம் வேலை செய்வது அனைவரும் வெளிப்படையாக அறிந்த ஒன்று.

அவர்களில் பலர் திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள், அவர்கள் வார இறுதி நாட்களில் வேலை செய்வதில்லை. பாலிவுட்டில் இவ்விவகாரத்தில் இரட்டை வேடம் போடப்படுகிறது.

இந்திய திரைப்படத் துறை ஒரு 'தொழில்' என்று அழைக்கப்பட்டாலும், அது அமைப்புசாரா ஒன்றாகவே இருக்கிறது.

இந்திய திரைப்படத் துறை ஒரு 'தொழில்' என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் ஒருபோதும் அது தொழில் துறை போன்று செயல்பட்டதில்லை என்பதுதான் பெரிய பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.

இது மிகவும் வரையறுக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. மேலும் சரியான அமைப்புகளையும் கட்டமைப்பையும் நாம் கொண்டு வர வேண்டிய நேரம் இது.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

இப்போது நிறைய பெண்களும், புதிய தாய்மார்களும் எட்டு மணி நேரம் வேலை செய்யத் தொடங்கி இருப்பதை நான் அறிவேன்.

ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவை தலைப்புச் செய்திகளில் வருவதில்லை. எனவே இதைப் பற்றி எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நியாயமான வேலை மற்றும் பணி செய்யும் சூழ்நிலைக்காக பல நேரங்களில் போராடி இருக்கிறேன். இது எனக்குப் புதிதல்ல.

சம்பளத்தைப் பொறுத்தவரை, அதனுடன் வரும் எதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. அதை என்னவென்று அழைப்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் எப்போதும் என் போராட்டங்களை அமைதியான முறையில் நடத்துவேன்.

சில விசித்திரமான காரணங்களுக்காக, சில நேரங்களில் அவை பகிரங்கமாகிவிடும். ஆனால் அமைதியாகவும் கண்ணியமாகவும் என் போராட்டங்களை நடத்துவது எனக்குத் தெரிந்த வழி'' என்று தெரிவித்தார்.

அபுதாபி சுற்றுலா விளம்பரம்: தீபிகா படுகோனே ஆடை மீதான ட்ரோல்களும் ரசிகர்களின் ஆதரவும்; பின்னணி என்ன?

சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர சிங்குடன் அபுதாபி சுற்றுலா விளம்பரத் தூதராகச் சேர்ந்தார். அவர் விளம்பர தூதராகச் சேர்ந்தவுடன் அவர் அபுதாபியில் உள்ள சுற்றுலா தலங்களைப் பார்வைய... மேலும் பார்க்க

"கரிஷ்மா கபூரின் திருமண வாழ்க்கையை பிரியா அழித்தார்" - சஞ்சய் கபூர் சகோதரி புகாரின் பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சஞ்சய் கபூர் நடிகை கரிஷ்மா கபூரை விவாகரத்து செய்துவிட்டு பிரியா சச்சி... மேலும் பார்க்க

சைபர் குற்றம்: "ஆன்லைனில் கேம் விளையாடிய என் மகளிடம் நிர்வாண போட்டோ கேட்டனர்" - அக்‌ஷய் குமார் வேதனை

நாடு முழுவதும் சைபர் கிரிமினல் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் மக்கள் சைபர் கிரிமினல்களிடம் பணத்தை இழப... மேலும் பார்க்க

AI, DeepFake வீடியோக்கள் வெளியிட்ட யூடியூப் சானல்கள்; ரூ.4 கோடி கேட்டு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் வழக்கு

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது புகைப்படம், பெயர் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்... மேலும் பார்க்க

Asha Bhosle: `ஆஷா போஸ்லே குரலைப் பயன்படுத்த தடை' - மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறுஉருவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாட... மேலும் பார்க்க

உலகின் பணக்கார நடிகரான ஷாருக் கான் - பின்னுக்குத் தள்ளப்பட்ட நடிகர்கள்

உலக பணக்காரர்கள் பற்றிய விபரத்தை ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக நடிகர் ஷாருக்கான் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்த... மேலும் பார்க்க