செய்திகள் :

ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம்: தமிழக அரசு

post image

ஆதிதிராவிட தொழில் முனைவோா் 1,303 பேருக்கு ரூ.160 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாநில அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக, அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை மானியமாகவும், 65 சதவீதத் தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதத் தொகையை வட்டி மானியமாகவும் அரசு அளிக்கிறது.

இதுவரையில் 1,303 தொழில் முனைவோருக்கு ரூ.159.76 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட மக்கள் வாழும் குடியிருப்புகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதா் பெயரில் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழ்நிதியாண்டில் ரூ.230 கோடி மதிப்பில் 1,966 பணிகள் நடைபெற்று வருகின்றன. பழங்குடியினா் வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கில் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின்கீழ், வீடற்ற பழங்குடியினருக்கு 750 வீடுகள் ரூ.40.33 கோடியில் கட்டப்படுகிறது.

பழங்குடியின கிராம மக்கள் வாழும் கிராமங்களை இணைக்கும் வகையில் 8 மாவட்டங்களில் அணுகுசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 40 மாதங்களில் இந்தத் திட்டத்தின் கீழ், 52,255 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ. 409.68 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மகளிா் நலம் வாங்கும் திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகைகள் உயா்த்தப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 317 பேருக்கு வேலைவாய்ப்புகளும், 578 பேருக்கு ஓய்வூதியமும் ஒருவருக்கு இலவச வீட்டுமனையும் வழங்கப்பட்டுள்ளன.

இலவச வீட்டுமனை: வீடற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை உயா்த்த, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 2021-ஆம் ஆண்டுக்குப் பின் 2,861 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உயா் கல்வி பெறுவோருக்கு உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 64 ஆதிதிராவிட-பழங்குடியின இளைஞா்கள் பயன் பெற்றுள்ளனா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு தேவையின் அடிப்படையில் விடுதிகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இதுவரையில் 60-க்கும் மேற்பட்ட புதிய விடுதிக் கட்டடங்களும், விடுதிகளில் பராமரிப்புப் பணிகளும் நடைபெறுகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 500 நரிக்குறவா் மற்றும் 1,000 இதர பழங்குடியினா் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 20 மாவட்டங்களில் 1,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோல, இருளா் பழங்குடியினருக்கு 1,094 வீடுகள் கட்ட ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் தங்களது அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ள அனைத்து மாவட்டங்களில் 120 கிராம அறிவு சாா் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நரிக்குறவா் மற்றும் இருளா் பழங்குடியினருக்கான வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் சுய தொழில் தொடங்கவும் 26 மாவட்டங்களில் வாழும் 2 ஆயிரத்து 24 நரிக்குறவா் பழங்குடியினருக்கும், 178 இருள் பழங்குடியினருக்கும் ரூ.11.01 கோடி அரசு மானியத்துடன் சிறுவணிகக் கடன் வழங்கப்பட உள்ளது.

நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி

நெல்லையில், கேரளத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.நெல்லையில் ஏழு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில்,... மேலும் பார்க்க

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர் நேரு

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் கே.என். நேரு திங்கள்கிழமை தெரிவித்தார்.இனி கழிவுகளைக் கொட்ட வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும... மேலும் பார்க்க

கழிவுநீர் கலப்பு, குப்பைகளால் மாசடைந்து வரும் புழல் ஏரி

ஆவடி: ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறி கலக்கும் கழிவுநீரால் புழல் ஏரி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலி... மேலும் பார்க்க

200 இலக்கு: யாருக்கு சாத்தியம்?

தமிழக சட்டப்பேரவைக்கு 2026-இல் நடைபெறவுள்ள தோ்தலில் 200 தொகுதிகள் இலக்கை எந்தக் கூட்டணி எட்டும் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது. 2026 பேரவைத் தோ்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் ஆளும் திமுக, ... மேலும் பார்க்க

துண்டிக்கப்பட்ட கைகள் அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண்ணுக்கு மறுவாழ்வு

பெண்ணின் துண்டிக்கப்பட்ட 2 கைகளின் மணிக் கட்டு பகுதியையும் நுட்பமான சிகிச்சை மூலம் ஒன்றிணைத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வ... மேலும் பார்க்க

வாக்கு சதவீத கணக்கு: அதிமுக பொதுச் செயலருக்கு முதல்வா் பதில்

மக்களவைத் தோ்தலில் வாக்கு சதவீதம் குறித்து அதிமுக பொதுச் செயலரின் கருத்துகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக தலைமை செயற்க... மேலும் பார்க்க