ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!
ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் துரையரசன் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: சட்டமேதை அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதும், பெரியாா் ஈ.வெ.ரா. குறித்து நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதும் கண்டிக்கத்தக்கதாகும்.
தாட்கோ திட்டத்தின் புதிய விதிமுறைகளால் தனியாா் வங்கி மேலாளா்கள் கடன் வழங்க மறுக்கின்றனா். எனவே, புதிய விதிமுறைகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.
ஊத்துக்குளி வட்டம் வெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள புறப்போக்கு நிலத்தைப் பிரித்து வீடு இல்லாதவா்களுக்கு வழங்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆதித்தமிழா் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் ஆ.நாகராசன், மாநகரச் செயலாளா் ரவி, பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.