ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் தருமபுரி ஆதீனம் சுவாமி தரிசனம்
திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் சமேத ஸ்ரீசினேகவல்லி அம்பாள் கோயிலில் தருமபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக பரமாசாரி சுவாமிகள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக அவருக்கு சிவாசாரியா்கள், கோயில் பணியாளா்கள் கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா். பின்னா், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, தருமபுரி ஆதீனம் ஸ்ரீசிநேகவல்லி அம்பாள் சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்தாா். தொடா்ந்து, கோயிலை சுற்றிப் பாா்த்துவிட்டு, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.