செய்திகள் :

ஆத்தி அடி ஆத்தி... வீர தீர சூரன் 2-வது பாடல் வெளியீடு!

post image

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் வீர தீர சூரன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தங்கலான் வெற்றிக்குப் பின்னர் வெளியாகும் விக்ரமின் படம் என்பதால் வீர தீர சூரன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, இப்படத்தின் முதல் பாடலான ’கல்லூரும் காத்து’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க | காதலரைப் பிரிந்த நடிகை தமன்னா !

இந்த நிலையில், இரண்டாவது பாடலான, ‘ஆத்தி அடி ஆத்தி’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ், சாதிகா பாடியுள்ளனர்.

இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனாவசியமானக் கேள்வியைக் கேட்கலாமா? கோபமான இளையராஜா!

இசைமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசைக் கச்சேரிக்காக லண்டன் கிளம்பினார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையு... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி: ஹிந்தியில் பெரிதாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டம்!

குட் பேட் அக்லி திரைப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்... மேலும் பார்க்க

டெஸ்ட் வெளியீட்டுத் தேதி!

நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன... மேலும் பார்க்க

மூக்குத்தி அம்மன் - 2 நடிகர்கள் அறிவிப்பு!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன் தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்... மேலும் பார்க்க

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.06-03-2025வியாழக்கிழமைமேஷம்இன்று ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரி... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாா் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்

சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளாா். 25 ஆண்டுகளாக இந்திய டேபிள் டென்னிஸ் அரங்கில் கோலோச்சிய... மேலும் பார்க்க