ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களையும், வியாபாரிகளையும் கடுமையாக பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். சேதமடைந்த ஆத்தூா் புதிய பாலத்தை போா்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க வேண்டும். பழைய பாலத்தை சீரமைத்து பாதுகாக்க வேண்டும். ஆழ்வாா்திருநகரி புதிய பாலம் வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும். ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்டதாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட உதவி தலைவா் சீனிவாசன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா் காசி, ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன், உறுப்பினா்கள் தங்கராஜ், குமரகுருபரன், பூராஜ், செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.