செய்திகள் :

ஆந்திரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரண்!

post image

ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்டுகள் 11 பேர் நேற்று சரணடைந்தனர்.

அல்லூரி சீதராம ராஜு மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பர்தார் முன்னிலையில் மாவோயிஸ்டுகள் 11 பேர் நேற்று சரணடைந்தனர். இவர்கள் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்கள்.

சரணடைந்த 11 பேரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் 39 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பழங்குடியின இளைஞர்களுக்கு காவல்துறையினர் வழங்கிவரும் வேலைவாய்ப்புத் திட்டங்களும் தொலைதூர கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்துதருவது, மொபைல் போன் டவர்கள் அமைப்பது என உள்கட்டமைப்பு வசதிகள் அந்தப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்டதும் இவர்கள் சரணடைய காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சரணடைந்த நபர்கள் அரசின் திட்டங்கள் மூலம் பயனடையுமாறு வலியுறுத்திய காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்குரிய சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | தேவாலயங்களைக் குறிவைக்கும் ஆர்எஸ்எஸ்: பினராயி விஜயன்

மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ஜெயின் சமூகத்தினரிடையே பேசிய முதல்வர் மமதா பானர்ஜி, சிறுபான்மையின மக்களையும் அவர்... மேலும் பார்க்க

பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் எப்படியிருக்கிறார்?

சிங்கப்பூரில், பள்ளி இயங்கி வந்த கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி பலியான நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண... மேலும் பார்க்க

ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை

அண்மை நாள்களாக, ஜிப்லி செய்யறிவு கலை மூலம் தங்களது புகைப்படங்களை மாற்றி அந்த ஜிப்லி புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், நிச்சயமாக ஜிப்லி புகைப்படங்கள் வேண்டுமா என்று சிந்திக்குமாறும், ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் போராட்டம்! போலீசார் தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் முறைகேடு புகாரில் வேலையிழந்த ஆசிரியர்கள் அந்த மாநில அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிரியர்​களை நியமனம் செய்​த​தில் முறை​கேட... மேலும் பார்க்க

ரூ. 63,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்கள்: மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மாத இறுதியில்... மேலும் பார்க்க