1-5 வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடக்கம்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை
மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் போராட்டம்! போலீசார் தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் முறைகேடு புகாரில் வேலையிழந்த ஆசிரியர்கள் அந்த மாநில அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிரியர்களை நியமனம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் 25,000 ஆசிரியர்களின் பணி நியமனத்தைத் ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
பணியிடங்களுக்கு அதிகமாக நியமனங்கள், வெற்று ஓஎம்ஆர் ஷீட்டுக்கு மதிப்பெண்கள் அளித்து பணி நியமனம் என முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது.
இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 அன்று உறுதி செய்துள்ளது. இதையடுத்து 25,000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து மேற்கு வங்க அரசுக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் மமதா பானர்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநில அரசுக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலிகுரி பகுதியில் கையில் பதாகைகளுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஸ்பா காவல் நிலையப் பகுதியில் தங்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க | வரிவிதிப்புகள்! டிரம்ப்பின் இடிமுழக்கமும் உலகின் பெருங் கலக்கமும்!