செய்திகள் :

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

post image

ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவர் தனது காரை நிறுத்தியிருக்கிறார். கார் பூட்டப்பட்டுள்ளதா என்பதை அவர் சரிபார்க்க தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு குழந்தைகள் ​​மழை காரணமாக காரைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காரின் கதவு தற்செயலாக பூட்டிக்கொண்டது. கதவைத் திறந்து குழந்தைகளால் வெளியேற முடியாததால் அவர்கள் அனைவரும் கடுமையான வெப்பத்தாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் மூச்சுத் திணறி பலியாகினர். இதனிடையே அவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளைத் தேடியுள்ளனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எங்கு தேடியும் குழந்தைகள் இல்லாததால் குடும்பத்தினர் மாலையில் அவர்களை காரில் கண்டுபிடித்தனர். காரின் ஜன்னல்களை உடைத்து குழந்தைகளை மீட்டனர். எனினும், மூச்சுத் திணறல் காரணமாக நான்கு பேரும் ஏற்கெனவே பலியாகினர். பலியான குழந்தைகள் உதய் (8), சாருமதி (8), கரிஷ்மா (6), மற்றும் மனஸ்வினி (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அதில், சாருமதி மற்றும் கரிஷ்மா உடன் பிறந்தவர்கள். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில், விஜயநகரம் கிராமப்புற போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் உரிமையாளரை அடையாளம் காண விசாரணையைத் தொடங்கினர்.

சடலங்கள் மீட்க்கப்பட்டு உடற்கூராய்வுக்காக விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி கோயிலுக்கு.. மைசூர் அரச குடும்பத்தினர் 100 கிலோ வெள்ளி விளக்கு நன்கொடை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 100 கிலோ எடையுள்ள வெள்ளி விளக்கை நன்கொடையாக வழங்கியுள்ளார் பக்தர் ஒருவர். பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானிடம் வேண்டுதல்கள் வைப்பதும், அது... மேலும் பார்க்க

எச்சில் துப்பியவர்களிடம் ரூ. 32 லட்சம் அபராதம் வசூல்: ரயில்வே

ரயில் நிலையங்களில் எச்சில் துப்பிய குற்றத்துக்காக மூன்று மாதங்களில் ரூ. 32 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிழக்கு ரய... மேலும் பார்க்க

கா்னல் சோஃபியா குரேஷி விவகாரம்: அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க

மே 29ல் சிக்கிம் செல்கிறார் பிரதமர் மோடி?

சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார். பிரதமர் மோடிய... மேலும் பார்க்க

கூகுள் உதவியுடன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த மனநலம் பாதித்த பெண்

தாணேவில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூகுள் தேடலின் உதவியுடன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்சைச் சேர்ந்தவர் ஃபுல்தேவி சந்த் லால் (50). மனநலம் பாதிக்கப்பட்ட இப்ப... மேலும் பார்க்க

ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து ... மேலும் பார்க்க