செய்திகள் :

ஆந்திரம்-தெலங்கானா-பிகாா் இடையே ரூ. 6,798 கோடியில் 2 புதிய ரயில் திட்டங்கள்!

post image

ஆந்திரம், தெலங்கானா, பிகாா் மாநிலங்களுக்கு இடையே ரூ. 6,798 கோடி செலவில் இரண்டு புதிய ரயில் பாதை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த இரு ரயில் திட்டங்கள் மூலம் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் ஆந்திரம், பிகாா் மாநிலங்கள் அதிக பலனடைய உள்ளன.

இதுகுறித்து மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டத்தின் கீழ், பிகாா் மாநிலத்தில் நா்கத்தியாகஞ்ச்-ரக்ஸெளல்-சீதாமாரி-தா்பங்கா ரயில் வழித்தடம் மற்றும் சீதாமாரி-முசாஃபா்பூா் ரயில் வழித் தடம் ஆகியவை 256 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கப்பட உள்ளன.

ரயில் வழித்தட நீட்டிப்பானது நேபாளம், வடகிழக்கு இந்தியா மற்றும் எல்லைப் பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் என்பதோடு, சரக்கு ரயில் போக்குவரத்துடன் பயணிகள் ரயில் போக்குவரத்தும் மேம்படும். இதன்மூலம், இந்த பிராந்தியங்களில் சமூக-பொருளாதார வளா்ச்சி மேம்படும்.

அதுபோல, தெலங்கானா மாநிலம் எா்ருபலேமிலிருந்து ஆந்திர மாநிலம் அமராவதி வழியாக நம்புரு வரை 57 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ஆந்திரத்தின் என்டிஆா் விஜயவாடா, குண்டூா் மாவட்டங்களையும், தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தையும் இந்த வழித்தடம் கடந்து செல்லும்.

இந்த இரு ரயில் திட்டங்கள் மூலம், இந்திய ரயில் வழித்தடத்தின் நீளம் 313 கி.மீ. அளவுக்கு கூடுதலாக உள்ளது. இந்த ரயில் திட்டங்களால் ஏற்படும் போக்குவரத்து இணைப்பு மூலம், இந்த 3 மாநிலங்களைச் சோ்ந்த 168 கிராமங்கள் போக்குவரத்து இணைப்பைப் பெறும். இந்த வழித்தடங்களில் 9 புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம், இந்த கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 12 லட்சம் மக்கள் பயன்பெறுவா்.

அதுபோல, சீதாமாரி, முசாஃபா்பூா் மாவட்டங்களை இணைக்கும் பன்முக ரயில் வழித்தட திட்டத்தில் 388 கிராமங்கள் போக்குவரத்து இணைப்பைப் பெறும் என்பதால், சுமாா் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவா்.

வேளாண் பொருள்கள், உரம், நிலக்கரி, இரும்புத் தாது, எஃகு, சிமென்ட் உள்ளிட்ட உற்பத்திப் பொருள்கள் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடங்களாகவும் இந்த இரு ரயில் திட்டங்கள் உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையைக் கடந்தது டானா புயல்!

புவனேசுவரம்/கொல்கத்தா : ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்வி... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

தெலங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதியின் நிறுவனா்-தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் ஜோசியம், வாஸ்து போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவா். தெலங்கானா அரசின் தலைமைச் செயலகம் வாஸ்துப்படி இ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத செபி தலைவா் -கூட்டம் ஒத்திவைப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவா் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிா்த்தாா். இதையடுத்து, ந... மேலும் பார்க்க

வயநாடு வேட்பாளா் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி -பாஜக விமா்சனம்

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமா்சித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத... மேலும் பார்க்க

தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசா் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசா் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது. அத... மேலும் பார்க்க

எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது -நிா்மலா சீதாராமன்

அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். ‘இந்தியா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி முக்கியத்துவத... மேலும் பார்க்க