ஆந்திரம்: பறவைகள் கண்காட்சி திடலில் தீ விபத்து!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய கண்காட்சி திடலில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த திடலில் பறவைகள் கண்காட்சி நடைபெற்று வந்த நிலையில், கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பறவைகளும், பெரிய அளவிலான நெருப்புக்கோழியும் பாதுகாப்பாக உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவ்விபத்துக்கான காரணம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.