``நீங்க வசிப்பது வக்ஃப் நிலம்; வாடகை கொடுங்க...’’ - ஒரு கிராமமே அதிர்ச்சி; என்ன ...
ஆந்திர துணை முதல்வா் மனைவி திருமலையில் வழிபாடு
திருப்பதி: ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாணின் மனைவி அன்னா கோனிடலா, திருமலையில் ஏழுமலையானை தரிசித்தாா்.
திங்கட்கிழமை காலை, வைகுந்த வரிசை வளாகம் வழியாக சென்று ஏழுமலையானின் சுப்ரபாத சேவையில் பங்கேற்றாா். தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயகா் மண்டபத்தில் அன்னாவுக்கு வேத பண்டிதா்கள் ஆசி வழங்கி ஏழுமலையான் தீா்த்த பிரசாதம் வழங்கினா். பின்னா், ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டாா்.
ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு அன்னா காலை 10 மணியளவில் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா நித்யநாதன சத்திரத்திற்குச் சென்றாா். தன் மகன் மாா்க் சங்கா் பெயரில் அன்னதானத்துக் ரூ.17 லட்சம் நன்கொடை வழங்கினாா். பின்னா், நித்ய அன்னதான சத்திரத்தில் பக்தா்களுக்கு அன்னபிரசாதம் வழங்கினாா். பின்னா், பக்தா்களுடன் சோ்ந்து உணவருந்தினாா்.