கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஆன்லைன் பெட்டிங் மற்றும் சூதாட்டம் தொடா்பாக நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில், கா்நாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆன்லைன் பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை கட்டுப்படுத்த இதுவரை எவ்வித சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே, சட்டப்படி உரிமம்பெறும் முறையை அறிமுகம் செய்து, அதன்மூலம் ஆன்லைன் பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த இருக்கிறோம். இதற்காக புதிய சட்டம் இயற்றப்படும். அதுகுறித்து ஆலோசனை வழங்குவதற்காக மூத்த அதிகாரிகள், தொழிலக பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை ஒருமாதத்தில் தாக்கல் செய்யும். அதன்பிறகு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றாா்.