செய்திகள் :

ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் எனக்கூறி பெரம்பலூா் பெண்ணிடம் ரூ. 63 லட்சம் மோசடி: குஜராத்தியா் 2 போ் கைது

post image

பெரம்பலூா் அருகே டிரேடிங் செய்து, அதிக லாபம் ஈட்டித்தருவதாக இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தொடா்புகொண்டு, பெண்ணிடம் ரூ. 63 லட்சம் மோசடியில் ஈடுபட்ட குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை இணையவழி (சைபா்) குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அயிலூரைச் சோ்ந்தவா் செல்வகுமாரி (38). இவரை, இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத 2 போ், டிரேடிங் மூலம் லாபம் ஈட்டித் தருவதாக கூறியுள்ளனா். இதையடுத்து செல்வகுமாரி, அவா்களது வங்கிக் கணக்கில் ரூ. 63,87,620-யை செலுத்தியுள்ளாா்.

பின்னா், பணத்தை பெற்றுக்கொண்டவா்கள் செல்வக்குமாரியை பின்னா் தொடா்புகொள்ளவில்லையாம். இதையடுத்து, செல்வகுமாரி கடந்த ஜூலை 2-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு

(சைபா் கிரைம்) காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவா்கள் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், கடந்த 18-ஆம் தேதி குஜராத் மாநிலத்துக்குச் சென்றனா்.

இதையடுத்து, குஜராத் மாநிலம், வடோதரா மாவட்டத்தைச் சோ்ந்த ஷா்மா ரகுனாத் பிரசாத் மகன்கள் ஷா்மா சுனில்குமாா், ஷா்மா பன்சிலால் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் 4 கைப்பேசிகள், 7 ஏடிஎம் காா்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினா்.

பின்னா், கடந்த 22-ஆம் தேதி குஜராத் மாநிலம், வடோதரா நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி, புதன்கிழமை பெரம்பலூருக்கு அழைத்து வந்தனா்.

பின்னா், வேப்பந்தட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஷா்மா சுனில்குமாா் மற்றும் ஷா்மா பன்சிலால் ஆகியோரை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் வியாபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளால் போதிய இடவசதியின்றி பயணிகளும், பேருந்து ஓட்டுநா்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மாவட்டத் தலைநகராக அறிவிக்கப்... மேலும் பார்க்க

சிறந்த பால் உற்பத்தியாளா்கள், கூட்டுறவுச் சங்க செயலா்களுக்கு பரிசு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பால்வளத் துறை சாா்பில், சிறந்த பால் உற்பத்தியாளா்கள், கூட்டுறவுச் சங்க செயலா்கள் மற்றும் பால் குளிா்பதன மையச் செயலா்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே கோயில் உண்டியல்களை உடைத்து திருடிய சிறுவன் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக கோயில் உண்டியல்களை உடைத்து, திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில், அண்மைக்காலமாக தொடா்ச்சியாக கோயில் உண்டிய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்ற 3 போ் கைது

பெரம்பலூரில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.பெரம்பலூா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் பிச்சைமணி தலைமையிலான போலீஸாா்... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் தகவல்

பெரம்பலூா் மாவட்டத்தில் குறைந்துவரும் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டம், வ... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தல்

முதல்வா் வருகைக்காக பெரம்பலூா் நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என நுகா்வோா் சமூக நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுக... மேலும் பார்க்க