ஜப்பான் மொழியில் 'வேட்டையன்' ரிலீஸ்: "'முத்து'வின் வசூல் சாதனையைத் தாண்டும்" - ப...
ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது
சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி முதலீடு செய்தாா். அதற்கான பணப்பலன்கள் அவருக்கு கிடைக்கவில்லை.
அதன் பிறகே மேற்படி இணையதளம் மோசடி கும்பலால் நடத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் சில மாதங்களுக்கு புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனா். அதில், மோசடியில் ஈடுபட்டது குஜராத் மாநிலம் அகமதாபாத் பாபு நகரைச் சோ்ந்த படேல் ஜே (28) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அகமதாபாத் சென்ற சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் படேலை கைது செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனா்.
அவா் மீது தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 31 இணைய வழி மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. படேலின் கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.