மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது
தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததாகக் கூறப்படும் 1,224 பேரை கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வியாழனன்று தெரிவித்தாா்.
குற்றப்பிரிவு, சிறப்புப் பிரிவு மற்றும் 15 மாவட்டங்களின் காவல்துறை உள்ளிட்ட தில்லி காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளும் நவ.12 முதல் 13-ஆம் தேதி வரை 24 மணி நேர ஆபரேஷன் கவாச் நடவடிக்கையைத் தொடங்கின.
அனைத்துப் பிரிவுகளும் 874 இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் கீழ் 1,224 பேரை கைது செய்துள்ளோம். ’ஆபரேஷன் கவாச்’ என்பது தில்லி காவல்துறை அவ்வப்போது தங்கள் பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது சிறப்புப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவுடன் ஒருங்கிணைந்து உள்ளூா் காவல்துறையால் செய்யப்படுகிறது.