ஆந்திரா: தன்னைக் கடித்த பாம்பை போதையில் திரும்பக் கடித்துத் துப்பிய நபர்; உயிருக...
ஆப்கான் சிறையில் பிரிட்டன் தம்பதி; ஐநா எச்சரிக்கை; கத்தார் பேச்சுவார்த்தை; விடுதலையான பின்னணி என்ன?
ஆப்கானிஸ்தானில் சுமார் 8 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதியினர், கத்தார் நாட்டின் முயற்சிகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வந்த பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ரெனால்ட்ஸ் (80) மற்றும் அவரது மனைவி பார்பரா (76) ஆகியோர் அங்கு ஒரு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் சட்டங்களை மீறியதாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல மாதங்களாக சிறையிலிருந்த அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

சிறையில் அவர்களது உடல்நிலையும் மனநிலையும் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
கத்தார் நாட்டின் முன்னெடுப்பில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த விடுதலை சாத்தியமாகியுள்ளது. விடுவிக்கப்பட்ட அவர்கள் உடனடியாக கத்தார் தலைநகர் தோகாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குப் பல மாதங்களுக்குப் பிறகு தங்களது மகளைக் கண்டதும் அவர்கள் ஆனந்தக் கண்ணீரில் உணர்ச்சிவசப்பட்டனர்.
இந்த விடுதலையை வரவேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், இதற்கு உதவிய கத்தார் நாட்டிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தம்பதியினர் விரைவில் லண்டன் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!