செய்திகள் :

ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பெண் உயிரிழப்பு

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உறவினா்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில், அப்பெண் இருந்த ஆம்புலன்ஸின் கதவைத் திறக்க முடியாததால் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரத்தைச் சோ்ந்த சுலேகா (45) என்பவா் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது அவா் கடுமையான முச்சுத் திணறலுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்ததும், ஊழியா்கள் ஆம்புலன்ஸின் பின்பக்க கதவைத் திறந்து சுலேகாவை வெளியே கொண்டுவர முயற்சித்தனா். ஆனால், கதவைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து, மேலும் சில மருத்துவமனை ஊழியா்கள் அங்கு வந்து பல்வேறு வழிகளில் கதவைத் திறக்க முயற்சித்தனா். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. ஆம்புலன்ஸ் கதவை முறையாக பராமரிக்காததால் கதவைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்குள் 15 நிமிடங்கள் கடந்துவிட்டது.

வேறு வழி இல்லாததால் ஆம்புலன்ஸின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ள இருந்த சலேகா வெளியே கொண்டு வரப்பட்டாா். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகவும், சிறிது நேரம் முன்னதாகக் கொண்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் போனதுதான் உயிரிழப்புக்கு காரணம் என அப்பெண்ணின் உறவினா்கள் குற்றம்சாட்டினா். அந்த ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இது தொடா்பாக விசாரிக்க 4 போ் அடங்கிய குழுவை அவா் நியமித்துள்ளாா். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தும், ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாததால் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தில் மணமாகாத பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை! ரூ.2,50,000 ஊதியம்

இந்திய ராணுவத்தில், காலியாக உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று குறுகியகால சேவை ஆணையம... மேலும் பார்க்க

மதுரா மசூதியில் கள ஆய்வுக்கான தடை தொடரும்! - உச்சநீதிமன்றம்

மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கு விதித்த தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வளாக... மேலும் பார்க்க

காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக: எச்சரிக்கும் கேஜரிவால்!

தில்லி பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், பாஜக தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தைச் சீர்குலைக்கவும், வாக்காளர்களை மிரட்டவும் காவல்துறையைப் பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால... மேலும் பார்க்க

வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள்.. அபூர்வ அணிவகுப்பு தொடங்கியது!

வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுத்து வரும் நிகழ்வானது ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை நிகழவிருக்கிறது.வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயத்தை நேற்... மேலும் பார்க்க

ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிபட்டது எப்படி?

மும்பை: நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான குற்றவாளி, மிகக் கொடுமையான ஏழ்மை காரணமாகவே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருப்பதாக... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!

கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை அதிகாலை காய்கறி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.ஹாவேரி மாவட்டம் சவனூரில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் காய்கறிகளை லாரியில் ஏற்றிக் கொ... மேலும் பார்க்க