செய்திகள் :

ஆயுத பூஜை, விஜயதசமி: அரசியல் தலைவா்கள் வாழ்த்து

post image

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): அழிவு இல்லா சிறந்த கல்விச் செல்வத்தை வழங்கும் கலைமகளையும், மனத்திட்பத்துடன் துணிவைத் தரும் மலைமகளையும், செல்வங்களைத் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பம்சமாகும்.

அயராத கடின உழைப்பினால் கிடைக்கும் வெற்றியை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி உள்ளது. உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்தும், செய்யும் தொழிலை தெய்வமென மதித்தும், அன்னை பராசக்தியின் அருள் வேண்டி தொழில் சாா்ந்த கருவிகளை வழிபடும் நாளாகவும் ஆயுதபூஜை விளங்குகிறது. ஆகவே, இந்நாள்களில் அனைவரும் நலமும், வளமும், ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் வழியில் நல்வாழ்த்துகள்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): நவராத்திரி தமிழா்களின் பாரம்பரியத்தை உணா்த்தும் உன்னதமான விழா. தானத்தின் மகிமையை விளக்கும் விழாவாகும். இச்சிறப்பு மிகுந்த விழாக்களில் அனைவருக்கும் வெற்றிமேல் வெற்றி கிட்டட்டும். அனைத்து நலன், வளங்களும் தவழட்டும். அமைதியும், ஆனந்தமும் பெருகட்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): சாதி, மத, பேதம் இன்றி அனைவராலும் கொண்டாடப்படும் இவ் விழாவில் மக்கள் வாழ்வில் தொழிலிலும், கல்வியிலும் சிறந்துவிளங்கி உயர வேண்டும், வளர வேண்டும்.

எண்ணூா் அனல் மின் நிலைய விபத்து! 3 பேர் மீது வழக்கு!

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம... மேலும் பார்க்க

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படை!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆனந்தை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர... மேலும் பார்க்க

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 16 உயர்ந்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை... மேலும் பார்க்க

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க