ஆய்க்குடியில் ரூ. 19 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
பொதுநிதி திட்டத்தின்கீழ் (2024-2025) ன் கீழ் ரூ.15 லட்சத்தில் மயான சுற்றுச் சுவா் அமைத்தல், ரூ.4 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப் பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா்,பேரூராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் ஷோபா மாடசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.