ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் ஏழை ஜோடிக்கு இலவச திருமணம்
ஆரணி புதுக்காமூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை ஜோடிக்கு வெள்ளிக்கிழமை இலவச திருமணத்தை ஆரணி எம்.பி. நடத்தி வைத்தாா்.
புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சோ்ந்த பி.அருள் - பிரியதா்ஷினி ஜோடியை தோ்வு செய்து, கோயில் செயல் அலுவலா் உமேஷ் குமாா் தலைமையில் இலவச திருமணம் நடைபெற்றது.
இவா்களுக்கு அரசு சாா்பில் 4 கிராம் திருமாங்கல்யம் மற்றும் பீரோ உள்ளிட்ட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், சிறப்பு விருந்தினராக ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் திருமணத்தை நடத்தி வைத்தாா். கோயில் ஆய்வாளா் மணிகண்டபிரபு வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தமிழ்நாடு தொழிலாளா் திறன் மேம்பாட்டுக் குழு உறுப்பினா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகர பொறுப்பாளா் வ.மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் துரை மாமது, எஸ்.மோகன், வழக்குரைஞா் எம்.சுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.