“சிறுபான்மையினருக்கு அரணாக உறுதியாக நிற்போம்!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆரம்பம்... சென்னையை நோக்கி வரும் மழைமேகங்கள்!
சென்னையை நோக்கி வந்துகொண்டிருக்கும் மழைமேகங்களால் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மழை மேகங்கள் வடசென்னை வழியாக நகர்ந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (18-12-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதையும் படிக்க: கேரம் வீராங்கனைக்கு தாமதமாக பரிசு வழங்கியது ஏன்? உதயநிதி விளக்கம்
இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று(டிச. 18) காலைமுதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் குறிப்பாக அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, மாம்பலம், அசோக் நகர், எழும்பூர், கீழ்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.