Jallikattu 2025 : அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Live Video
ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சென்னை ஐஐடி விளக்கம்
சென்னை: ஆராய்ச்சி மாணவி ஒருவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடா்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி - தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீா்க் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவா் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற ஆண் மாணவா்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா்.
போலீஸாா் அந்த நபரைப் பிடித்து சென்னை ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனா். அந்த நபா் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறாா். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடா்பும் இல்லை. சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
வளாகத்துக்குள் குடியிருப்பவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.