செய்திகள் :

ஆரோமலே அறிமுக விடியோ!

post image

பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் மற்றும் நடிகர் கிஷன் தாஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள “ஆரோமலே” திரைப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

விஜே சித்து வி லாக்ஸ் யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் ஹர்ஷத் கான். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தில் குட்டி டிராகன் எனும் கதாபாத்திரம் மூலம் நடிகராகத் தனி முத்திரைப் பதித்தார்.

”முதல் நீ முடிவும் நீ” போன்ற திரைப்படங்களில், நாயகனாக நடித்த கிஷன் தாஸ் உடன் இணைந்து ஆரோமலே எனும் புதிய திரைப்படத்திலும் தற்போது அவர் நடித்துள்ளார்.

இயக்குநர் சாரங் தியாகு இயக்கியுள்ள இந்தப் புதிய படத்தை, மினி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நடிகர் விடிவி கணேஷ் நடிகைகள் மேகா ஆகாஷ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரது நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், நகைச்சுவையான காதல் கதையை மையமாகக் கொண்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக விடியோவை படக்குழுவினர், இன்று (செப்.11) வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: கென் கருணாஸ் இயக்கும் படத்தின் பெயர்!

The teaser of the film “Aaromale”, starring popular YouTuber Harshad Khan and actor Kishan Das, has been released.

புரோ கபடி லீக் 2025: தமிழ் தலைவாஸை விட்டு வெளியேறிய பவன் செஹ்ராவத்!

தமிழ் தலைவாஸ் அணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், நட்சத்திர ரைடரும் அணித் தலைவருமான பவன் செஹ்ராவத் அணியைவிட்டு வெளியேறியுள்ளார்.இது தொடர்பாக வெளியான தகவல்படி, பவன் அணியின் ஜெய்ப்பூர் சுற்... மேலும் பார்க்க

இட்லி கடை: நித்யா மெனன் அறிமுக போஸ்டர்!

இட்லி கடை படத்தில் நடிகை நித்யா மெனனின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் வரும் அக்.1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன்... மேலும் பார்க்க

கூலி படத்தின் மோனிகா விடியோ பாடல் வெளியானது!

கூலி படத்தில் இடம் பெற்றிருந்த மோனிகா விடியோ பாடல் வெளியானது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் ஆமிர் கான், சத... மேலும் பார்க்க

1000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையைப் பேசும் காந்தாரா - 1!

நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சேப்டர் - 1 படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 199... மேலும் பார்க்க

கென் கருணாஸ் இயக்கும் படத்தின் பெயர்!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, நடித்துவரும் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ். இயக்... மேலும் பார்க்க