ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!
புஷ்பா - 2 படத்தின் வசூல் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலைக் கடந்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 1400 கோடி வரை வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மிக குறைவான நாள்களில் இந்த சாதனையைப் அடைந்ததுடன் சில பிரம்மாண்ட படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது.
இதையும் படிக்க: அனில் கபூர் படத்தை இயக்கும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர்!
முக்கியமாக, எஸ். எஸ். ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் (ரூ.1360 கோடி), கேஜிஎஃப் - 2 (ரூ. 1250 கோடி) படங்களின் வசூலை புஷ்பா - 2 கடந்துள்ளது.
இந்தியளவில் அதிக வசூலித்த படமான தங்கல் (ரூ. 2000 கோடி), பாகுபலி - 2 (ரூ. 1850 கோடி) முதல் இரண்டு இடங்களில் இருக்க புஷ்பா - 2 மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.