செய்திகள் :

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

post image

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது.

இந்த பரிவர்த்தனை மூலம் 296 மில்லியன் பவுண்டுகள் வருவாய் கொண்ட ஆர்டிஃபெக்ஸ், டாடா ஆட்டோகாம்ப் குழுமத்தில் இணையும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கையகப்படுத்தல் மூலம், டாடா ஆட்டோகாம்ப் இந்தியாவின் மிகப்பெரிய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களில் ஒருவராக தனது நிலையை பலப்படுத்தும் வேளையில், ஐரோப்பாவின் வாகனத் துறையிலும் அதன் இருப்பை வலுப்படுத்தும்.

இந்த கையகப்படுத்தல் மூலம், எங்கள் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், வாகன உட்புற அமைப்புகளில் எங்கள் நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் அரவிந்த் கோயல்.

ஆர்டிஃபெக்ஸின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி திறன் எங்கள் தொழில்நுட்ப தலைமையை மேம்படுத்தும் அதே வேளையில், பிரீமியம் வாகன பிரிவில் எங்கள் இருப்பை வலுப்படுத்தும் என்றார் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மனோஜ்.

இதையும் படிக்க: நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

உ.பி.யில் 3 அரவை இயந்திரத்தை நிறுவிய ஸ்ரீ சிமெண்ட்!

புதுதில்லி: முன்னணி சிமென்ட் உற்பத்தியாளரான ஸ்ரீ சிமென்ட், உத்தர பிரதேசத்தில் உள்ள எட்டாவில், ஆண்டுக்கு 30 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட புதிய அலகை ஒன்றைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.பங்கூர் கு... மேலும் பார்க்க

ஏப்ரல் 8 முதல் ரூ.62,000 வரை விலையை உயர்த்தும் மாருதி சுசூகி!

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தனது பயணிகளின் வாகனங்களின் விலையை ரூ.62,000 வரை உயர்த்துவதாக அறிவித்தது.அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள்... மேலும் பார்க்க

2024-ல் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ!

2024ஆம் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.இணைய வேகத்தையும் தொலைத்தொடர்பு அலைவரிசையையும் கணக்கிட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓக்லா நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ.85.52-ஆக முடிவு!

மும்பை: வர்த்தக கட்டணங்கள் மீதான நிச்சயமற்ற தன்மையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 2 காசுகள் சரிந்து ரூ.85.52 ஆக நிலைபெற்றது.டிரம்பின் பரஸ்பர கட்டண கவலைகள் மற்றும் அந்நிய நிதி... மேலும் பார்க்க

ஐக்யூ நிறுவனத்துக்குப் போட்டியாக ரியல்மி! ஏப். 9-ல் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் இரு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப். 9ஆம் தேதி அறிமுகமாகின்றன. நர்ஸோ வரிசையில் ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ மற்றும் நர்ஸோ 80எக்ஸ் ஆகிய இரு போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன. இந்த இரு ஸ்மார்ட்... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!

ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், ஒரு ரூபாயில் இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பல்வேறு தொல... மேலும் பார்க்க