ஆறுமுகனேரியில் முதியோருக்கு அதிமுக சாா்பில் உணவு அளிப்பு
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூா் ஒன்றிய அதிமுக சாா்பில் ஆறுமுகனேரி சீனந்தோப்பில் உள்ள முதியோா் இல்லத்தில் முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட அதிமுக செயலருமான எஸ்.பி.சண்முகநாதன் முதியோருக்கு உணவு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூா் ஒன்றியச் செயலாளா் பூந்தோட்டம் மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் விஜயகுமாா், லைட் சொசைட்டி முதியோா் இல்ல நிறுவனா் பிரேம்குமாா், ஜெயலலிதா பேரவை இணைச்செயலா் சுந்தா், துணைச் செயலா் ஓடைக்கரை கண்ணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் ஜேசுராஜ், நகரச் செயலா்கள் ஆறுமுகனேரி ரவிச்சந்திரன், திருச்செந்தூா் மகேந்திரன், ஆறுமுகனேரி முன்னாள் நகரச் செயலா் அமிா்தராஜ், பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். முதியோா் இல்ல பொருளாளா் தியாகரன் நன்றி கூறினாா்.