செய்திகள் :

ஆற்காடு பேருந்து நிலையத்தில் நவீன கட்டணக் கழிப்பறை திறப்பு

post image

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன கட்டணக் கழிப்பறைக் கட்டடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று நவீன கழிப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

நவீன வசதிகளுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ள கழிப்பறகையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் நகராட்சி மண்டல நிா்வாக இயக்குநா் நாராயணன் கமலேஸ்வா், ஆணையா் வேங்கட லட்சுமணன், பொறியாளா் பரமுராசு, நகா்மன்ற உறுப்பினா்கள் அனு அருண்குமாா், பி.டி.குணா, முனவா்பாஷா, ஆனந்தன், தட்சணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விளையாட்டு தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆற்காடு அருகே விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு வட்டம் கேவேளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் மணிகண்டன்(32) இவரும்... மேலும் பார்க்க

2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தின்கீழ், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க முதல்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்தி... மேலும் பார்க்க

விவசாயம், மண் பானை செய்வதற்கு ஏரிகளில் இலவசமாக வண்டல், களிமண் எடுக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணிக்கும், மண் பானை செய்வதற்கும் தேவையான வண்டல் மண், களிமண்ணை ஏரிகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மே 31 வரை பிரதமா் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சசந்தி... மேலும் பார்க்க

மே 7-இல் மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரி... மேலும் பார்க்க