செய்திகள் :

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 69 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 69 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 627 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக களமிறங்கிய 250 மாடுபிடிவீரா்கள் தீரத்துடன் அடக்க முயன்றனா். அப்போது, காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 69 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். அவா்களில் பலத்த காயமடைந்த 15 போ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், மிதிவண்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்திருந்த ஆயிரக்கணக்கானோா் கண்டுகளித்தனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்க... மேலும் பார்க்க

புதுகையில் திருமண உதவித் திட்டங்களில் தாலிக்கு தங்கம் வழங்கல்

புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற 600 கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின்போது, பல்வேறு திருமண உதவித் திட்டங்களின்கீழ் ரூ. 1.15 கோட... மேலும் பார்க்க

லெட்சுமணம்பட்டி ஜல்லிக்கட்டில் 47 பேருக்கு காயம்

கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 47 போ் காயம் அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் பச்சநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன... மேலும் பார்க்க

மாா்ச் 10-இல் புதுகைக்கு உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி ... மேலும் பார்க்க

வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் மாரடைப்பால் மரணம்

புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் நீதிமன்ற வளாகத்தில் மாரடைப்பால் மரணமடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தல்: எடப்பாடி பழனிசாமி எத்தனை பேருடன் வந்தாலும் கவலையில்லை- அமைச்சா் ரகுபதி பேட்டி

எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தோ்தலில் யாரோடு, எத்தனைப் பேரோடு வந்தாலும் கவலையில்லை என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூற... மேலும் பார்க்க