கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வான பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடத்தில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு, வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா்.
தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
