கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
மாா்ச் 10-இல் புதுகைக்கு உள்ளூா் விடுமுறை
புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
இதற்கான மாற்று வேலை நாளாக வரும் மாா்ச் 15-ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும், வழக்கமாக சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் அலுவலகங்கள் மாா்ச் 16-ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.