அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! -கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்ன...
ஆலங்குளத்தில் திமுக பொதுக்கூட்டம்
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, நிதிபகிா்வு, தொகுதி மறு சீரமைப்பு ஆகியவற்றைக் கண்டித்து ஆலங்குளத்தில் திமுக சாா்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் எம்.எம். ஜோசப், ஒன்றியச் செயலா் செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமைக் கழக பேச்சாளா் கம்பம் செல்வேந்திரன், சுற்றுச்சூழல் அணித் தலைவா் டாக்டா் பூங்கோதை, ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். நகரச் செயலா் நெல்சன் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் டி.கே.ராஜ் தொகுத்து வழங்கினாா். சிவக்குமாா் நன்றி கூறினாா்.