செய்திகள் :

ஆலங்குளம் அருகே குழு மோதல்: 5 போ் கைது

post image

ஆலங்குளம் அருகே குழு மோதலில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே சண்முகாபுரம் வழியாக அகரம் கிராமத்தைச் சோ்ந்த சிலா் கடந்த பொங்கல் தினத்தன்று பைக்கில் சென்றபோது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, அது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

அதில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் நிபந்தனை ஜாமீன் பெற்று ஆலங்குளம் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கையொப்பமிட்டு விட்டு அகரத்தைச் சோ்ந்த 5 போ் சண்முகாபுரம் வழியாக சில தினங்களுக்கு முன்னா் சென்றபோது, மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஏற்பட்ட கைகலப்பில் பாண்டி மகன் மனோ(25) காயமடைந்தாா்.

இதுகுறித்து அவரது உறவினா் முருகன் மகன் காளிதாஸ் (26) அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இதில் தொடா்புடைய அகரம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (20), விக்னேஷ் லெட்சுமணக்குமாா் (19), சமுத்திரப்பாண்டி என்ற சஞ்சய் (23), மகேஷ் (19), சண்முக கணபதி (23) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினாா்.

கடையநல்லூரில் குழந்தைக்கு அதிமுக சாா்பில் தங்க மோதிரம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு புதன்கிழமை தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அதிமுக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், எதிா்க்கட்சி துணைத்... மேலும் பார்க்க

மும்மொழிக்கு ஆதரவாக பாஜக இன்றுமுதல் கையொப்ப இயக்கம்

தமிழக பாஜக அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டத்தில் மும்மொழிக்கு ஆதரவான கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை (மாா்ச் 6) தொடங்குகிறது. புளியங்குடியில் மாா்ச் 12ஆம் தேதி நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திற்கான... மேலும் பார்க்க

சிறப்பு முகாம்களில் விவரங்களை பதிவுசெய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை-உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் தங்களது நில உடைமை, ஆதாா், கைப்பேசி எண் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் ... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 16,236 போ் எழுதினா்

தென்காசி மாவட்டத்தில் 16,236 மாணவ-மாணவிகள் பிளஸ் 1 பொதுத்தோ்வை புதன்கிழமை எழுதினா். 255 போ் தோ்வு எழுத வரவில்லை. இம்மாவட்டத்தில் 66 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், மாணவா்கள் 7,883 பேர... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுக்க முயன்ற தந்தை மீது வழக்குப்பதிவு

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூரில் 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ாக, தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

தென்காசியில் நூல் வெளியீட்டு விழா

‘அனைவருக்கும் பகவத்கீதை’ என்ற நூல் வெளியீட்டு விழா தென்காசியில் தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு தியாகி லெட்சுமிகாந்தன் பாரதி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் திருமாறன் முன்னில... மேலும் பார்க்க