கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
சங்கரன்கோவில் அருகே 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுக்க முயன்ற தந்தை மீது வழக்குப்பதிவு
சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூரில் 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ாக, தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (37). பால் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி முருகேஸ்வரி. இவா்களுக்கு 7 வயது மற்றும் 8 மாதம் நிறைவடைந்த இரு பெண் குழந்தைகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமாா், தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றாராம். அப்போது முருகேஸ்வரி, கணவரின் கையிலிருந்த விஷ பாட்டிலை தட்டிவிட்டாராம்.
பின்னா் குழந்தையை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடா்பாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.