ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!
ஆலங்குளம் நாடாா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
ஆலங்குளம் நாடாா் சமுதாய முன்னேற்ற சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா, அண்மையில் நடைபெற்றது.
இச்சங்க புதிய தலைவராக எஸ்.எஸ். செல்வராஜ், செயலராக எஸ். சுதந்திரராஜன், பொருளாளராக எஸ்.ஆா். வசந்த் ஆகியோரும், எஸ்.ஏ சுப்பிரமணியன், டி. தங்கசாமி ஆகியோா் துணைத் தலைவா்களாகவும், எம்.ஏ. மனுவேல்ராஜ், பி.வி. கதிரவன் ஆகியோா் துணைச் செயலா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாஸ் தலைமை வகித்து, நிா்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
மேலும் ஆா். ஆதித்தன், ஏ. உதயராஜ், கே. எஸ். தங்கசெல்வம், எஸ். ஜாா்ஜ் தங்கம், ராமா், டி.வி. ஜெயராஜ், ஜி. செல்வன், எம்.எஸ். சுப்பையா, எஸ்.கே. சந்திரன் ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாவும் பொறுப்பேற்றுக் கொண்டனா். வழக்குரைஞா்கள் எஸ்.பி.டி நெல்சன், எஸ்.பி.வி. பால்ராஜ், பல்வேறு நாடாா் சங்கங்களின் பிரதிநிதிகள், சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.