டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
ஆலத்தூா் ஐராவதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு
திருமருகல்: திருமருகல் ஒன்றியம், ஆலத்தூா் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஐராவதீஸ்வரா் கோயில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சுமாா் 185 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதையொட்டி நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்கிற்காக, கடந்த 4-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து 5-ஆம் தேதி புனித மண், புனிதநீா் மற்றும் முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. 6-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி 10 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.