செய்திகள் :

ஆளுநர் திடீரென வெளியேறியது ஏன்? வெளியான விளக்கம்

post image

பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.

பேரவையில் முதலில் தேசிய கீதம் வாசிக்க ஆளுநர் ரவி முன்பே வலியுறுத்தியிருந்தார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறியதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன.

தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதல்வரிடமும் சட்டப்பேரவை சபாநாயகரிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பள்ள... மேலும் பார்க்க

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் எப்போது?

சென்னை : தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப். 7 முதல் பிப். 14 வரை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்... மேலும் பார்க்க

காவல் துறை அரசியல் ஏஜென்சி அல்ல: நீதிமன்றம்

புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன்? என விளக்கம் அளிக்கக் கோரி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சிக்கு அ... மேலும் பார்க்க

ஜன.11-ல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு?

தமிழகத்தில் ஜன.11-ல் தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ... மேலும் பார்க்க

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாமலை

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன்... மேலும் பார்க்க

நீலகிரியில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவும்!

நீலகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் இரவு நேரங்களில் உ... மேலும் பார்க்க