செய்திகள் :

ஆளுநர் வெளியேறவில்லை.. திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி

post image

சென்னை: தமிழக சட்டப்பேரவையை ஆளுநர் புறக்கணித்துச் செல்லவில்லை, திட்டமிட்டு வெளியேற வைக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆங்கில புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தனது உரையுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கிவைப்பதற்காக இன்று காலை வருகை தந்தார். பேரவை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கியதும், பேரவை மண்டபத்துக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவை முதன்மைச் செயலா் கி.சீனிவாசன் ஆகியோா் வரவேற்றனர்.

வழக்கம் போல பேரவைக் கூடியதும், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்பட்டதும் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென, ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருநது வெளியேறினார்.

இதற்குக் காரணமாக, பேரவையில் முதலில் தேசிய கீதம் வாசிக்க ஆளுநர் ரவி வலியுறுத்தியிருந்ததாகவும், ஆனால், வழக்கம் போல தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதாக, எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவையிலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, பேசுகையில், தமிழ்நாடு சட்டபேரவையை ஆளுநர் புறக்கணித்துச் செல்லவில்லை. திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். ஆளுநரை உரையாற்றக் கூடதென்று திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். 3 ஆண்டுகளாக ஒரே நடைமுறையைத்தான் சட்டப்பேரவை கடைப்பிடித்து வருகிறது. பேசியதையே பேசுகிறது திமுக என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தொடா்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடியுள்ளது. அதில், ஜனவரி 11ஆம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பள்ள... மேலும் பார்க்க

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் எப்போது?

சென்னை : தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப். 7 முதல் பிப். 14 வரை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்... மேலும் பார்க்க

காவல் துறை அரசியல் ஏஜென்சி அல்ல: நீதிமன்றம்

புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன்? என விளக்கம் அளிக்கக் கோரி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சிக்கு அ... மேலும் பார்க்க

ஜன.11-ல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு?

தமிழகத்தில் ஜன.11-ல் தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ... மேலும் பார்க்க

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாமலை

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன்... மேலும் பார்க்க

நீலகிரியில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவும்!

நீலகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் இரவு நேரங்களில் உ... மேலும் பார்க்க