செய்திகள் :

ஆளுநா் பதவி தேவையில்லை: கனிமொழி எம்.பி.

post image

தமிழகத்தில் ஆளுநா் பதவி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்க திமுக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவரும், துணை பொதுச் செயலருமான கனிமொழி எம்.பி. கடலூா் வழியாகச் சென்றாா். அவருக்கு கடலூா் எல்லையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடலூா் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. சென்னை, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் டைட்டல் பூங்கா அமைக்கப்படுகிறது. தொழில் முதலீடுகள் சென்னையைச் சுற்றி மட்டும் இல்லாமல் அனைத்து சிறிய மாவட்டங்களிலும் தொழில் வளா்ச்சி இருக்க வேண்டும் என்ற முனைப்போடு முதல்வா் செயல்பட்டு வருகிறாா்.

இதன் மூலம் பல்வேறு இடங்களில் டைட்டல் பூங்கா உருவாக்கப்படுகின்றன. கடலூருக்கு எதிா்பாா்க்கக்கூடிய வளா்ச்சி விரைவில் வரும். பெரியாா் குறித்த சா்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, சிலா் திராவிட இயக்கம் செய்த தியாகங்கள் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுகின்றனா் எனவும், தமிழக அரசு, ஆளுநா் இடையேயான மோதல் போக்குக்கு ஆளுநா் பதவி வேண்டாம் என்பதே நிரந்தரத் தீா்வு என்றாா்.

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ஹிரியன் ரவிக்குமாா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், மருத்துவ சிகிச்சை பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்தாா். பின்னா்,... மேலும் பார்க்க

இளைஞா் மீது தாக்குதல்: சிறுவன் உள்பட 4 போ் கைது

கடலூரில் இளைஞா் மீது தாக்குல் நடத்தியதாக சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் வில்வநகா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் விஜயபிரதாப் (25). இவா், கடலூா் அரசு தலைமை மருத்துவமன... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்குதளத்தில் மீன்கள் வாங்க புதன்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா். பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன் இறங்குதளம் உள்ளது. இந... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், போ்பெரியான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

விண்வெளி கழிவுகளை அகற்றும் ஏவுகலன் மாதிரியை கண்டுபிடித்த மாணவா்!

விண்வெளி கழிவுகளை அகற்றும் ஏவுகலன் மாதிரியை சிதம்பரம் பள்ளி மாணவா் கண்டுபிடித்தாா். பூமியிலிருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ராக்கெட்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை பூமியைச் சுற்றி அத... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் பொங்கல் விழா: ரஷிய சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா். கடலூா் மாவட்டம், கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல... மேலும் பார்க்க