செய்திகள் :

ஆழ்கடல் ஆராய்ச்சி: ``வளம்பெற்ற பூம்புகார் பெருமையை வெளிக்கொணர்வோம்'' - முதல்வர் ஸ்டாலின் பதிவு

post image

சங்க காலத்தில் தமிழர்களின் முக்கிய துறைமுகமாக இருந்த பூம்புகார் குறித்து ஆய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.

அது குறித்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு"

மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும்,

மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில்,

பூம்புகார்: கடல் ஆய்வு | தமிழ்நாடு
பூம்புகார்: கடல் ஆய்வு | தமிழ்நாடு

பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியினை, பேராசிரியர் திரு. கே. ராஜன் அவர்களின் தலைமையில்,

தொல்லியல் துறை இணை இயக்குநர் திரு. சிவானந்தம் அவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.

பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை உலகறியச் செய்வதில் அவரது ஈடுபாட்டிற்கும், இந்த ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்." என்று தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்,

"கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்!

இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!

அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!!" என்று பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``என் நெஞ்சில் நடந்து செல்லுங்கள்'' - முதல்வரைப் பார்க்க வழி கேட்ட மூதாட்டிக்கு சுரேஷ் கோபி பதில்

மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு முதன்முதலில் எம்.பி ஆனவர் நடிகர் சுரேஷ்கோபி. அவர் மத்திய இணை அமைச்சராக உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சூரில் ... மேலும் பார்க்க

Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல கெடுபிடிகளை விதித்து வருகிறார்.இதையடுத்து, அவர் தற்போது 'தி ட்ரம்ப் கோல்டு கார்டு' விசா திட்டத்தை அறிமுகப்... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேல் உறவில் விரிசல்; நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் பேசினாரா ட்ரம்ப்? - என்ன நடந்தது?

கோபத்தில் உலக நாடுகள்!பாலஸ்தீனத்தின் மீதான தனது தாக்குதலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலால் மட்டுமல்லாமல், உணவு சென்றடையாமலும் பாலஸ்தீனத்தில் பலர் மடிகிறார்கள். இஸ்ரேல் பிரதமர் நெ... மேலும் பார்க்க

Trump: ``சீன அதிபருடன் போன்கால்; நான் சீனா செல்கிறேன், ஜி அமெரிக்கா வருவார்'' - ட்ரம்ப் சொல்வதென்ன?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். ட்ரம்ப் பதிவு இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சீன அதிபர் ஜி உடன் பயனுள்ள போன்காலைப் பேசி... மேலும் பார்க்க

Nepal: Gen Z போராட்டத்துக்குப் பிறகான முதல் அறிக்கை; இந்தியாவை இழுத்த ஒலி? - என்ன சொல்கிறார்..?

நேபாளம் நாட்டில் நடந்த ஜென் Z போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் அரசியலமைப்பு தினமான வெள்ளிக்கிழமை (செப் 19) முதன்முறையாக பொது அறிக்கையை வெளியிட்ட முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, அதில் இந்தியாவை... மேலும் பார்க்க

"காஸாவில் நடக்கும் போருக்கு மோடியும் காரணம்" - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்

பாலஸ்தீனம் மீது சுமார் இரண்டு ஆண்டுகளாக (2023 அக்டோபர் முதல்) இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது.இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 65,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக 19,000-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க