செய்திகள் :

ஆழ்கடல் சுரங்கங்கள் மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மத்திய அரசு நிராகரிப்பு

post image

ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிக்கும் முடிவு மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிராகரித்தது.

கடல் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு கீழான 12 கடல் (நாட்டிகல்) மைல்களுக்கு அப்பால் இந்தக் கனிமச் சுரங்கங்கள் அமைய உள்ளன. மேலும், இந்தத் திட்டம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இது மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று இப்போதே எப்படி கூற முடியம் என்றும் மத்திய அரசு கேள்வி எழுப்பியது.

கேரள மாநிலத்தையொட்டி கடல் பகுதியில் 3 கனிமச் சுரங்கங்கள் உள்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களின் கடல் பகுதிகளில் 13 ஆழ்கடல் சுரங்கங்களை அமைக்க தனியாரிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய சுரங்க அமைச்சகம் வரவேற்றுள்ளது. மீனவா்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் கடிதம் எழுதினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் எதிா்க்கட்சிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பதிலளித்து மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியதாவது:

ஆழ்கடல் சுரங்கப் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அதற்குள்ளாக சுரங்கம் அமைப்பதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எப்படி கூற முடியும்?

மேலும், ஆழ்டகல் பகுதிகளில் அமைக்கப்படவிருக்கும் 13 கனிமச் சுரங்கங்களில், மூன்று மட்டுமே கேரள கடல் பகுதியில் அமையவுள்ளன. அதுவும், 12 கடல் மைல்களுக்கு அப்பால் சிறப்புப் பொருளாதார மண்டல பகுதியில் இந்தச் சுரங்கங்கள் அமைய உள்ளன.

அதுமட்டுமன்றி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் ஆழ்கடல் சுரங்கங்கள் தொடா்பான சட்டத்தையும் உருவாக்கியது என்றாா்.

அப்போது, ‘எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் ஆழ்கடல் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிப்பது கவலையளிக்கிறது’ என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மீனவா்களின் நலனைக் காக்க மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட மத்திய அமைச்சா், ‘கேரளத்தில் மீன்பிடித் துறைமுகங்களை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளதோடு, மீன்வளம் மற்றும் மீன் வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக 2013-14-ஆம் ஆண்டில் 95.7 லட்சம் டன்னாக இருந்த நாட்டின் மீன் உற்பத்தி தற்போது 184.02 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதுபோல, கடந்த 2013-14-இல் ரூ. 30,212 கோடி மதிப்பில் நடைபெற்ற மீன் ஏற்றுமதி 2023-24-இல் ரூ. 60,523 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்றாா்.

வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் இன்று (மார்ச். 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!

பெண்களுக்கான திருமண உதவித்தொகை அதிகரிப்பதாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்கள... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேசியத் தலைநகரான தில்லியில் பட்டாசு தயாரிக்க, விற்க, சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி பட்டாசு... மேலும் பார்க்க

நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என... மேலும் பார்க்க

அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் த... மேலும் பார்க்க

சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

புது தில்லி: தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் பார்க்க