ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
ஆழ்வாா்குறிச்சி கல்லூரிப் பேராசிரியருக்கு விருது!
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியருக்கு மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது.
2015-16ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இக்கல்லூரியின் முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் பேராசிரியருமான ரஞ்சித் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு தமிழ்நாடு மாநில கல்லூரிக் கல்வி இயக்கக இயக்குநா் சுந்தரவல்லி விருது வழங்கினாா்.
பேராசிரியா் ரஞ்சித்துக்கு கல்லூரிச் செயலா் ஜி. தேவராஜன், முதல்வா் எஸ். மீனாட்சிசுந்தா், பேராசிரியா்கள், அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.