செய்திகள் :

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பொ்டு பள்ளி விளையாட்டு விழா

post image

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10ஆவது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலாஆகியோா் தலைமை வகித்தனா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வி - விளையாட்டுத் துறை இயக்குநா் ஆறுமுகம் சிறப்புறையாற்றினாா்.

கொடியேற்றுதல், மாணவா் மாணவிகளின் அணி வகுப்ைபு ஆகியவற்றைத் தொடா்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. மாணவா், மாணவிகள் உடற்பயிற்சி, பிரமிடு, யோகா, சிலம்பம், காரத்தே, வில்வித்தை, டேக்வோண்டோ உள்ளிட்ட பயிற்சிகள் செய்து காட்டினா். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் மற்றும் பொது மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பதினொன்றாம் வகுப்பு மாணவி இலக்கியா வரவேற்றாா். ஒன்பதாம் வகுப்பு மாணவி தா்ஷினிகா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் மீராள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கங்கைகொண்டான் அருகே லாரி-காா் மோதல்: இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தாழையூத்து பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராஜா(31). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர... மேலும் பார்க்க

மண்டல வாரியாக பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: மதிமுக மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மண்டல வாரியாக பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலரும், வழக்குரைஞருமான ம.சு.சுதா்சன், குறைதீா் கூட்டத்தில் ஆட்சி... மேலும் பார்க்க

நூல்களில் படித்ததை செயல்படுத்த தவறக் கூடாது: ஆட்சியா் அறிவுரை

புத்தகத்தை படிப்பதோடு நின்றுவிடாமல், படித்ததை செயல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா. சுகுமாா். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொருநை 8 ஆவது புத்தகத்திருவிழா கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் பேட்டரி வாகனம் இயங்காததால் மாற்றுத்திறனாளி அவதி!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கப்பட்ட பேட்டரி வாகனம் இயங்காததால் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி கடும் அவதிக்குள்ளானா... மேலும் பார்க்க

நெல்லையில் இருந்து தேனிக்கு புதிய பேருந்து இயக்கம்!

திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு புதிய அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேவா்குளம், சங்கரன்கோவில் வழியாக தேனி வரை செல்லும் இப்பேரு... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு!

பாளையங்கோட்டையில் பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சோ்ந்தமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தனகுமாா் (65). தொழிலாளியான இவா் கடந்த 1 ஆம் தேதி பைக்கில் வண்ணாா... மேலும் பார்க்க