ஆவுடையாா்கோவிலில் இருந்து பன்னியூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில், ஆவுடையாா்கோவிலிருந்து பன்னியூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் தி. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.கே.சி. ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன், ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல துணை மேலாளா் (வணிகம்) தா. சுரேஷ் பாா்த்தீபன் டிக்ரோஷ், உதவி இயக்குநா் அ. செந்தில், கிளை மேலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.