செய்திகள் :

இங்கிலாந்து: `பாலியல் வன்கொடுமை, இன ரீதியான தாக்குதல்’ - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

post image

இங்கிலாந்தின் வால்சல் பகுதியில் வசித்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் இன ரீதியாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் இன, நிற வெறிக் காரணமாக தாக்கப்படுகிறார்கள். சமீப காலமாக இந்தத் தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதன் ஒரு உதாரணமாக இந்தியாவைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவரை தேடிவருகிறது. மேலும், சந்தேக நபரின் சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட்டு, குற்றவாளி குறித்த தகவல்களை சேகரிக்க இங்கிலாந்தின் பொதுமக்களிடம் உதவிகோரியிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்துவரும் மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் கண்காணிப்பாளர் (DS) ரோனன் டைரர், ``இது ஒரு இளம் பெண் மீதான பயங்கரமான தாக்குதல் தொடர்பான வழக்கு. குற்றவாளியை கைது செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

குற்றவாளியை கைது செய்வதற்கான அதிகாரிகள் குழுக்கள் எங்களிடம் உள்ளன. தற்போது பல கட்ட விசாரணைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

டெல்லி: அந்தரங்க வீடியோவை அழிக்க மறுத்த லிவ் இன் பார்ட்னர்; மாஜி காதலன் துணையோடு எரித்து கொன்ற பெண்

டெல்லியில் உள்ள காந்தி விகார் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியில் ரமேஷ் என்பவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து ... மேலும் பார்க்க

Cyber Crime: மும்பையை அச்சுறுத்தும் டிஜிட்டல் கைது; 218 பேரிடம் ரூ. 112 கோடி பறிப்பு; திணறும் போலீஸ்

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து தவிக்கின்றனர். போலீஸார் இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய... மேலும் பார்க்க

குமரி: 14 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; இன்ஸ்பெக்டர் லஞ்ச வாங்கி சிக்கியதை தொடர்ந்து அதிரடி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ரூ.1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வழக்கில் இருந்து பெயரை ந... மேலும் பார்க்க

உயிரிழந்த பெண் டாக்டர்; SI செய்த வன்கொடுமை; காதலனின் பகீர் வாக்குமூலம்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள பால்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயது பெண் டாக்டர் தன்னை சப் இன்ஸ்பெக்டர் கோபால் என்பவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று எழுதி வைத்துவிட்டு... மேலும் பார்க்க

சண்டையிட்டுச் சென்ற மனைவி; இரு குழந்தைகளைக் கொன்ற தந்தை - பதறிய போலீஸ்

மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் சவான். நேற்று இவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெளியூருக்கு பயணம் சென்று கொண்டிருந்தார். வழியில் கணவன் மனைவி இடையே ஏதோ ஒரு பிரச்னையில் தி... மேலும் பார்க்க