காவல்நிலைய விசாரணையில் சிறுவன் பலி: 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை
இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்
தேடுபொறி தளமான கூகுள், ஒன்றைத் தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொண்டு முடிவுகளை அளிக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அதன் பின்னால் வெறும் தொழில்நுட்பம்தான் இருக்கிறதா? அல்லது யாரேனும் பணியாற்றுகிறார்களா என்ற சந்தேகமும் எழும்.
கூகுள் தேடுபொறி தளம், வெப் க்ராலர்ஸ் எனப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான இணையதளங்களில் இருக்கும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஸ்கேன் செய்து, பட்டியலிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவர் கூகுள் இணையதளம் வந்து ஒரு ஒரு விஷயத்தைத் தேடும்போது, இந்த பட்டியலில், அவர் தேடுவதற்கு மிக நெருக்கமான ஒரு முடிவை இணையதளத்தில் காட்டுகிறது.
ஆனால், இந்த பட்டியலிடுவதில் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சின்ன தவறு நேர்ந்தாலும், தேடிக் கிடைக்கும் முடிவில் மிகப்பெரிய சங்கடத்தை சந்திக்க நேரிடலாம்.
இதுபோன்ற ஒரு சங்கடம்தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்துக்கு நேர்ந்துள்ளது. அதாவது, கூகுளில் யாராவது இடியட் என்று ஆங்கிலத்தில் தேடும்போது, கிடைக்கும் ஏராளமான புகைப்படங்களில் டொனால்ட் டிரம்ப் புகைப்படமே முன்னிலை வகிக்கிறது.