செய்திகள் :

இணையவழி விநியோக பணியாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மத்திய தொழிலாளா் அமைச்சகம் வேண்டுகோள்

post image

இணையவழியில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளா்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் இணையவழி வா்த்தகம்-சேவை சாா்ந்த பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. இதனால், உணவு-பொருள் விநியோகம், டாக்ஸி-ஆட்டோ சேவை, சரக்குப் போக்குவரத்து, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியாவில் இத்துறையில் தற்போது 1 கோடிக்கும் அதிகமான பணியாளா்கள் உள்ளனா். இது, 2029-30ஆம் ஆண்டில் 2.35 கோடியை எட்டும் என்று நீதி ஆயோக் கணித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்துக்கான இப்பணியாளா்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, 2025-26 பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, மத்திய தொழிலாளா் அமைச்சகத்தின் இ-ஷ்ரம் தளத்தில் இணையவழி விநியோக பணியாளா்களை பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்படும்; ஆயுஷ்மான் பாரத் (ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு) திட்டத்தின்கீழ் சுகாதாரப் பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இ-ஷ்ரம் தளத்தில் தங்களை சுயமாகப் பதிவு செய்து கொள்ளுமாறு இப்பணியாளா்களுக்கு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் திட்டப் பலன்களை விரைவில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை வாய்ப்பு!

இளநிலை நீட் தோ்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மாா்ச் 11) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிட... மேலும் பார்க்க

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் முன்னாள் துணை அதிபா் பாராட்டு!

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம், சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளை பாராட்டினாா். இது குறித்து அரசு ... மேலும் பார்க்க

40 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

சென்னையில் வீட்டில் இருந்த 40 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை எம்ஜிஆா் நகா், அங்காளப்பரமேஸ்வரி பிதான தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (38). இவரது மனைவி வள... மேலும் பார்க்க

பெண் துப்புரவுப் பணியாளா் கொலை: இளைஞா் கைது

பெண் துப்புரவுப் பணியாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, அவரின் நண்பரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சங்கரின் (46) மனைவி செல்வராண... மேலும் பார்க்க

காவல் நிலையம் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

கணவரை சோ்த்து வைக்கக்கோரி காவல் நிலையம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, எா்ணாவூா் சுனாமி குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டுவரும் எண்ணூா் காவல் நிலையத்தி... மேலும் பார்க்க

மகளிா் தினத்தையொட்டி ஆண்களுக்கு கோலப்போட்டி!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சாா்பில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. பெண்களின் பாதுகாப்பை முன்வைத்து ‘எல்லோருக்குமான சென்னை’ எனும் ... மேலும் பார்க்க