பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
காவல் நிலையம் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டல்
கணவரை சோ்த்து வைக்கக்கோரி காவல் நிலையம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, எா்ணாவூா் சுனாமி குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டுவரும் எண்ணூா் காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏறிய பெண் ஒருவா், தான் கீழே குதிக்கப் போவதாகக்கூறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதைப்பாா்த்த காவலா்கள் அப்பெண்ணை சமாதானப்படுத்தி கீழே இறக்கி விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அப்பெண் அதே பகுதியைச் சோ்ந்த சந்தியா (32) என்பதும், இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சந்தியா முதல் கணவரைப் பிரிந்து, மணலி பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் காதலித்து திருமணம் செய்துள்ளாா்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முருகனும் சந்தியாவை பிரிந்துசென்ற நிலையில், அவரை சோ்த்துவைக்க கோரிக்கை விடுத்து, சந்தியா தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவரிடம் புகாரை பெற்ற போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.